நினைத்தாலே இனிக்கும்

நான் சென்ற வாரம் நினைத்தாலே இனிக்கும் படம்  சிட்டி சென்டெரில் உள்ள Inox  திரை அரங்கந்தில் பார்த்தேன். அரங்கந்தின் இருக்கைகளும் ஒலி அமைப்புகளும் மிக அருமை.

இந்த படத்தில் பிரிதிவிராஜ், இயக்குனர் வாசுவின் மகன் சக்தி நடித்துள்ளனர்

நினைத்தாலே இனிக்கும் என்ற பழைய புகழ் பெற்ற படத்தின் தலைப்பு பெற்றதால் சில எதிர்பார்ப்புகளுடன் சென்றேன்.

படத்தில் தலைப்பை உறுதி படுத்தும் வகையில் படத்தில் நடித்துள்ள அனைவரும் நினைத்து பார்க்கிறார்கள். படம் முழுவதும் ஒரே flashback. கல்லூரி மாணவர்களின் கதை. இதை இன்னும் மிக நேர்த்தியாக திரைக்கதை  அமைத்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது .   கிராம பகுதிகளில் ஓர் ஆசிரியர் பள்ளி என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதை போன்று கல்லூரியில் ஒரு பிரின்சிபால் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  இயக்குனர் நம்மை என்ன வென்று நினைத்து இப்படி படம் எடுத்தார் என்று தெரியவில்லை.

இசை விஜய் அந்தோனி . ஒன்று இரண்டு பாடல்கள் தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை

மொத்தத்தில் இந்த படம் பார்த்ததை “நினைத்தாலே கசக்கும்”

2 thoughts on “நினைத்தாலே இனிக்கும்

Leave a comment