உன்னை போல் ஒருவன்

சென்ற வாரம் உன்னை போல் ஒருவன் திரைப்படம் சென்னை அபிராமி திரை அரங்கத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நினைத்தாலே இனிக்கும் படம் Inox திரை அரங்கத்தில் கண்டதாலோ என்னவோ   அபிராமி திரை அரங்கம் இப்பொழுது அவ்வளவு நன்றாக இல்லாதது போல் தோன்றியது.  Sound  Effects கூட ரொம்ப பிரமிப்பாக தோன்றவில்லை.

இது ஹிந்தி படம் “Wednesday ” வை தழுவி எடுத்த படம் என்றாலும் நான் அந்த படம் பார்க்கததால் எனக்கு இது புதிய கதையாகவே தோன்றியது. 
எந்த விதமான  மனதிற்கு பயம் தரும் காட்சி அமைப்புக்களும் இல்லாமல் இது போன்று ஒரு விறு விறுப்பான படம் ஒன்றை அளித்ததிற்கு கமலுக்கு பாராட்டுகள்.

படத்தில் ஒரு கதா பாத்திரத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைவருக்கும் அளவான முக்கியத்துவம் கொடுத்து நல்ல முறையில் எடுக்க பட்டுள்ளது.

படத்தில் பாடல்கள் ஒன்றும் இல்லை. அதுவே படத்தின் கதை ஓட்டத்திற்கு  பெரிய துணையாக உள்ளது.  கமல் மகள் சுருதி பின்னணி இசை மிக அருமையாக உள்ளது. மோகன்லால் மற்றும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள அனைவரும் மிக நேர்த்தியாக செய்துள்ளனர்

படம் மொத்தமே இரண்டு மணி நேரதிருக்குள்தான். ஆங்கில படங்கள் போன்று தமிழிலும் படங்கள் வருவதற்க்கு இந்த படம் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது

படத்தில் comedy  track  என்று தனியாக எதுவும் இல்லாமல் அதில் வரும் காட்சி அமைப்புகளும் மற்றும் கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களுமே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.  பல காட்சிகளில் திரை அரங்கம் கை தட்டும் நிகழுவுகள் நடக்கும் படங்கள் இப்பொழுது மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும் அனால் இந்த படம் அதற்க்கு விதி விலக்காக உள்ளது

ரொம்ப நாளைக்கு பிறகு மிக நல்ல படம் ஒன்றை பார்த்த திருப்தி.
 உன்னை போல் ஒருவன், “நம்மை போல் ஒருவன்” என்று தோன்ற வைக்கும் படம்

One thought on “உன்னை போல் ஒருவன்

Leave a comment